அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் வரும் பணம் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், நடைமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன என்று கூறிய கப்ரால், இதற்காக முறையான முறைமைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ வழிகளில் இருந்து பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் ஓய்வூதியம் போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இவற்றில் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே ரூ. 2 மேலதக கொடுப்பனவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)