க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை இலக்காகக் கொண்டு தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் ஆண்டுகளை ஆரம்பிப்பதற்காக கொவிட் அடக்குமுறை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.
அதன்படி, சுகாதார வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகள் நடத்தப்படுகின்றன, மேலும் பாடசாலை காலத்தில் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நீக்கம் செய்தல் மற்றும் மாணவர்களிடையே இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)