கஞ்சா செடி நமக்குக் கிடைத்த வரம்; இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கடனை அடைக்க முடியும்! நாங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை! -டயானா கமகே

கஞ்சா செடி நமக்குக் கிடைத்த வரம்; இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கடனை அடைக்க முடியும்! நாங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை! -டயானா கமகே

Dayana Gamage Ganja

நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று (16) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கொண்டு வருவதோடு பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்றார்.


சீனா மற்றும் கென்யா போன்ற பிற நாடுகள் தேயிலை பயிரிட ஆரம்பித்து சந்தைப் பங்கின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதால் இனி தேயிலையை வணிகப் பயிரிட முடியாது.


கஞ்சாவை இலங்கையில் வர்த்தகப் பயிர்ச்செய்கையாகக் கருதலாம். அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு முக்கிய ஏற்றுமதிப் பயிராகப் பயன்படுத்தப்படலாம். மற்ற நாடுகள் அதை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருமானத்தைப் பெறுகின்றன என்றார்.


"இலங்கைக்கு தேயிலை இனி நீண்டகால வணிகப் பயிர்ச்செய்கையாக இருக்காது. கஞ்சா செடி நமக்குக் கிடைத்த வரம். அரசின் அனுசரணையுடன் கஞ்சா வர்த்தகரீதியாக பயிரிடப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கடனை அடைக்க அந்நியச் செலாவணியை சம்பாதிக்கலாம். சர்வதேச நாணயநிதியம் அல்லது வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பணத்தை பிச்சை எடுக்க வேண்டியதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.


கஞ்சா தொடர்பாக 1,800களில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட கட்டளைச் சட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்றுமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.


ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளின்படி, அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய கஞ்சா சந்தைப் பங்கு 1000% அதிகரிக்கும் என்றும், 2027 ஆம் ஆண்டில் இது 140 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


கஞ்சா இறக்குமதியின் மூலம் பல வெளிநாடுகள் பெரும் வருமானத்தை ஈட்டுவதாக தெரிவித்த டயானா கமகே, உள்நாட்டில் ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.