இலங்கைக்கு வெளிநாட்டில் வேலை புரிபவர்கள் பணம் அனுப்புவதில் 50% வீழ்ச்சி!

இலங்கைக்கு வெளிநாட்டில் வேலை புரிபவர்கள் பணம் அனுப்புவதில் 50% வீழ்ச்சி!


முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொடக்கம் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பணப்பரிமாற்றம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 


கடந்த செப்டம்பர் 2020 இல் 703 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த பரிமாற்றம், செப்டம்பர் 2021 இல் தொழிலாளர்களின் பணம் 353 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளதாக ஓர் அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த ஆண்டில் மொத்த பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 4,577 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 9.3 சதவீதம் சரிவாகும். 


2021 ஆகஸ்ட் முதல் 2021 செப்டம்பர் வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான மொத்தப் புறப்பாடுகள் 38.6 சதவீதம் அதிகரித்து 12,274 பேராக பதிவாகியது.


இதில் திறமையான (4,503), திறமையற்ற (3,216) மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் (2,486) ஆகிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பணம் அனுப்பும் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான இலக்கு நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனைகள் எதிர்வரும் காலத்தில் மேல்நோக்கிய போக்கிற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2021 செப்டெம்பர் மாதத்திற்கான வெளித்துறை செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் ஒன்றிலேயே இந்த  புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.