சமையல் எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த இளம் வயது பெண்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

சமையல் எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த இளம் வயது பெண்!

சமையல் எரிவாயு வெடித்ததில் படுகாயமடைந்த 19 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நவம்பர் 13ஆம் திகதி பொலன்னறுவை வெலிகந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் திருமணமான பெண் காயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

கேஸ் குக்கரைப் பற்றவைக்க முயன்றதாகவும், பற்றாத காரணத்தினால் தீப்படியினால் பற்ற வைக்க முற்பட்ட போது, சிலிண்டர்  வெடித்துச் சிதறியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் வேற எவரும் இல்லாததால், அயலவர்கள் தீயை அணைத்து, காயமடைந்த பெண்ணை வெலிகந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடித்துக் கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை இறுதி கிரிகைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடித்து தனது மகள் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் மேலும் கோரியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.