நாளை சாய்ந்தமருதில் எழுத்தாளர் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!
advertise here on top
advertise here on top
happy kids fun world

நாளை சாய்ந்தமருதில் எழுத்தாளர் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!

முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்காளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா  சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நாளை  (27) சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 


சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

நிகழ்வில், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்சான் கலந்து கொள்வதோடு, நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் இக்ரா  யு. சத்தார் பெற்றுக் கொள்கிறார்.

சிறப்பு பிரதிநிதிகளை ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.