அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு கடந்த 2021.11.12 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.

அதில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் ஆகியோர் ஜம்இய்யாவின் சார்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்தியாவுடனான எமது உறவு பற்றியும், கல்வி மற்றும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் எதிர்கால கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.