பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது!

பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (12) மதியம் பாடசாலையை விட்டு வெளியேறிய வேளையில், சந்தேகநபர்கள் மூவர் மாணவியை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் செவனகல பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கடத்தல்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், துஷ்பிரயோகம் செய்தவர்களின் முயற்சிகளை பாடசாலை மாணவி பதிலடி கொடுத்து முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் வழிப்போக்கர் ஒருவர் சிறுமியை வீடு திரும்ப உதவியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 16 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.