கண்டி - திருமலை வீதியில் கோர விபத்து!! ஒருவர் பலி - நால்வர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - திருமலை வீதியில் கோர விபத்து!! ஒருவர் பலி - நால்வர் படுகாயம்!


கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது.


விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம். கரீம் (வயது - 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.