பேருவளை இரத்தினக்கல் வியாபாரியிடம் அகப்பட்ட நூறு கோடி பெறுமதியான இரத்தினக்கல்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

பேருவளை இரத்தினக்கல் வியாபாரியிடம் அகப்பட்ட நூறு கோடி பெறுமதியான இரத்தினக்கல்!


நாட்டில் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் (Phenakite Natural) இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த இரத்தினக்கல் இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் மிகப்பெரிய அளவிலானது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.


பேருவளையில் உள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வசம் தற்போது இந்த இரத்தினக்கல் உள்ளது.


அவர் பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து இந்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.


இதன் எடை 616.90 காரட் எனவும் இதன் விலை சுமார் 1 பில்லியன் ரூபா எனவும் அந்த வர்த்தகர் தெரிவித்தார்.


குறித்த வர்த்தகர் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு இது தொடர்பில் அறிவித்ததை அடுத்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


இந்த இரத்தினக்கல் மிகவும் அரிதானது மற்றும் விலை உயர்ந்தது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும் இதுபோன்ற இரத்தினக்கற்கள், இரத்தினகற்கள் சேகரிப்பாளர்களால் அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


மொஹமட் பஸ்ரீன் நசீர் என்ற இரத்தினக்கல் வியாபாரி கூறும்போது, "நான் பொதுவாக நாடு முழுவதும் இரத்தினக்கற்களை சேகரித்து தொழிலதிபர்களிடம் விற்று வருபவன். 


அப்படி சுமார் 4 கிலோ கற்கள் சேர்க்கப்பட்டது. அவற்றில் இந்த கல்லும் இருந்துள்ளது. அதை விற்கச் சென்றபோது, ​​அதை ஒரு படிகம் என ஒதுக்கப்பட்டது. பின்னர் நான் இதை சோதனைக்கு உட்படுத்தினேன். அப்போதுதான் இதன் பெறுமதியை உணர்ந்தேன். என் வாழ்நாளில் இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை" என்றார். (யாழ் நியூஸ்)Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.