ஆஸ்திரேலிய அணி…பாலியல் புகாரில் சிக்கிய கேப்டன்: திடீர் பதவி விலகல் - முழு விபரம்!

ஆஸ்திரேலிய அணி…பாலியல் புகாரில் சிக்கிய கேப்டன்: திடீர் பதவி விலகல் - முழு விபரம்!

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடர் துவங்க இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் டிம் பெய்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காரணம் என்ன?

2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, பந்தை சேதப்படுத்திய புகாரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு டிம் பெய்னிடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டது. அவர் பதவியேற்று சரியாக மூன்றாவது மாதத்தில், “பெய்ன் எனக்கு பாலியல் ரீதியான ஆபாச புகைப்படங்களை அனுப்பினார்” என கூறி பெண் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் அனுப்பியிருந்தார்.

அதன்பிறகு பெய்ன் மீது குற்றமில்லை என அறிவித்து, அவர் கேப்டன் பதவியில் தொடர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிம் பெய்ன், “இது நம்ப முடியாத முடிவு. ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு. நடந்த சம்பவம் குறித்து அப்போது நான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன். எனது குடும்பம் என்னை மன்னித்துவிட்டனர்”

“இந்த சம்பவம் பொது வெளியில் பெரிய பேசு பொருளாகும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன். எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் மற்ற தரப்பினருக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். இதனால், நமது (ஆஸ்திரேலிய) அணியின் நற்பெயருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு என நான் நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன்னால், பெரிய சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்துளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.