நாட்டில் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

நாட்டில் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

 
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணங்களில் ஈடுபடும் பலர் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம், ஐந்து மாவட்டங்களில் கோவிட் நோயாளிகளின் அதிகரிப்பு காணப்பட்டுள்ளதோடு அதிகாரிகள் கோவிட் கொத்தணிகளையும் கண்டறிந்துள்ளனர்.

அனுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பொது நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மக்கள் ஒன்றுகூடுவதால் வைரஸ் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக டாக்டர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணங்கள் உட்பட தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இதுபோன்ற நிகழ்வுகளால் கோவிட் கொத்தணிகளை உருவாகுவதை எங்களால் தடுக்க முடியாது. எனவேதான், கூடியவரை ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறோம்” என்று டாக்டர் அசேல குணவர்தன கூறினார்.

இதற்கிடையில், நேற்று 737 பேர் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக 700 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.