நாட்டில் கையிருப்பில் இருக்கும் எரிபொருள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர்!

நாட்டில் கையிருப்பில் இருக்கும் எரிபொருள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர்!

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கப்பட்டு வருவதாகவும், 36,000 மெற்றிக் தொன் பெற்றோல் நாளை (18) வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 40,000 மெற்றிக் தொன் டீசல் எதிர்வரும் 19ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.