மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10.00 மணி முதல் மூடப்படவுள்ளது.
கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

