பாராளுமன்ற செங்கோல் சேதம்; சரிசெய்ய பிரித்தானியாவுக்கு அனுப்ப வேண்டும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற செங்கோல் சேதம்; சரிசெய்ய பிரித்தானியாவுக்கு அனுப்ப வேண்டும்?


பாராளுமன்றத்தின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.


பாராளுமன்றத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின் போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை, உள்நாட்டில் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


செங்கோலில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை பிரித்தானியாவிலுள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.


எனினும், குறித்த சேதம் பாரிய சேதம் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.