வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை!


வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களைப் பெற்றுத் தருவதாகக்கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்கொரியாவிற்குத் தொழில்வாய்ப்புகளுக்காக உள்வாங்கும் மற்றும் பயிற்சியளிக்கும் பணிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுவதானது, இரு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.


எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.