பைத்தியக்காரத்தனம் மற்றும் கொடூரமான முறையில் ஒரு நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது! -சஜித்

பைத்தியக்காரத்தனம் மற்றும் கொடூரமான முறையில் ஒரு நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது! -சஜித்

 


பைத்தியக்காரத்தனம் மற்றும் கொடூரமான முறையில் ஒரு நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தனது திட்டமானது ஓர் அழகான வளமான நாடு என்றும், இது ஒரு பிரிவினருக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் திட்டம் என்றும் அவர் கூறினார்.


நாட்டைப் பற்றி உணர்வுப்பூர்வமாகச் சிந்தித்து மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்த்து, இதயமும் உள்ளமும் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.


ஆத்திரம், வெறுப்பு, கோபத்தால் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும், பேச்சு வார்த்தை, ஒருமித்த கருத்து, ஜனநாயகம் போன்ற மனிதாபிமான தர்மங்களால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.


திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.