எச்சரிக்கை - நாட்டில் சமூக சீர்கேடினை ஏற்படுத்தும் குழுக்கள்!

எச்சரிக்கை - நாட்டில் சமூக சீர்கேடினை ஏற்படுத்தும் குழுக்கள்!

இலங்கையில் இனவாத, மதவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்தச் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என இலங்கை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகளில் ஈடுபடும் கடும்போக்குவாதியான ஒருவராக அடையாளப்படுத்தப்படும் கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்ரைத்த அவர்,

''நாட்டில் மிகவும் தீவிரமான இனவாத, மதவாத செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதன் ஊடாக இந்த நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம். சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு இடையில் இதன் ஊடாக முரண்பாடு ஏற்படலாம்.

கடந்த காலங்களில் இது தொடர்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இதன்போது இந்த இனவாத, மதவாதக் குழுக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அண்மையில் பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஊடகங்களில் இது பெரிதாக அறிக்கையிடப்படவில்லை. எனினும் அதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்க முடியும். இது தொடர்பில் காவல்துறையினர் அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் கை நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய விடயம் பெரிய விடயமாக மாறும்.

தேசிய மத ஐக்கியம் மிக முக்கியம். இனவாத, மதவாத மற்றும் ஏகாதிபத்தியவாதம் காணப்படும் நாட்டிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. இது நாம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

இந்த நாட்டில் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. எனினும் அது இடம்பெறுவதாக தெரியவில்லை. அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும், அதிகாரத்தில் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டமும் நாட்டில் செயற்படுவதையே நாம் அவதானிக்கின்றோம். இந்த விடயத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த நாட்களில் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன” என அவர் கூறியுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.