ஐந்தே நிமிடங்களில் சாரதி அனுமதிபத்திரம் வழங்கிய நிலையத்தை முற்றுகையிட்ட புலனாய்வு பிரிவினர்!

ஐந்தே நிமிடங்களில் சாரதி அனுமதிபத்திரம் வழங்கிய நிலையத்தை முற்றுகையிட்ட புலனாய்வு பிரிவினர்!

ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கொழும்பு கொம்பனி வீதியில்(ஸ்லேவ் ஐலண்ட்) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன், 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் காலாவதியான 41 சாரதி அனுமதிப்பத்திரங்களும் இங்கு மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன.

மோசடிக்காரர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தில் அசல் சாரதி அனுமதிப்பத்திம் போல் சிப் அச்சிட்டுள்ளனர். இவற்றுக்குத் தேவையான பிரத்யேக ஸ்டிக்கர்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனம் ஓட்டும் பயிற்சி இல்லாதவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதவர்களுக்கும் கூட இந்த இடத்தில் நீண்ட காலமாக ரூ.12 ஆயிரத்திற்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.