விவசாயிகளுக்கு கமத்தொழில் அமைச்சரிடம் இருந்து நற்செய்தி!

விவசாயிகளுக்கு கமத்தொழில் அமைச்சரிடம் இருந்து நற்செய்தி!

அண்மையில் பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களின் சேதத்தை மதிப்பீடு செய்து அந்த நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 இதன்படி, சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய காப்புறுதி சபை மற்றும் விவசாய திணைக்களத்திற்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, அடை மழையினால் பாதிக்கப்பட்ட நெற்செய்கைக்கு தேவையான விதை நெல், சேதன உரம் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கு உரிய மதிப்பீடுகளை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (15) கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வருடம் மகா பருவத்தில் 35,000 ஏக்கருக்கு மேல் பயிர் சேதம் ஏற்படாது என கடந்த 15ஆம் திகதி பிற்பகல் ஜூம் (zoom) தொழிநுட்பத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. சில மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருவதால் சேதத்தை சரியாக மதிப்பிட முடியாது என கமநல அபிவிருத்திப் பிரிவு அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு அரசாங்கம் மீண்டும் விதை நெல் மற்றும் சேதன உரங்களை இலவசமாக வழங்கினால் சேதமடைந்த வயல் நிலங்களை மீள் நடவு செய்ய முடியும் என கமநல அபிவிருத்திப் பிரிவு அதிகாரிகள் அமைச்சரிடம் உறுதியளித்தனர்.  (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.