இவ்வாறான சிறந்த வரவு செலவு திட்டத்தை பசிலால் மட்டுமே வழங்க முடியும் - ரொனி டி மெல் இருந்தால் வாழ்த்தியிருப்பார்!

இவ்வாறான சிறந்த வரவு செலவு திட்டத்தை பசிலால் மட்டுமே வழங்க முடியும் - ரொனி டி மெல் இருந்தால் வாழ்த்தியிருப்பார்!

இம்முறை வரவு செலவுத் திட்டத்தை மிகவும் கடினமான நேரத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததாக அமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நிதியமைச்சர் ஒருவருக்கு வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதில் மிகவும் சவாலான தருணம் இது என்றும் அவர் மேலும் கூறினார்.

பசில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எவருக்கும் இந்தப் பணியை செய்ய முடியாது என்ற நிலை இருந்த நிலையிலேயே அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராக ரொனி மெல் இருந்திருந்தால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பசில் ராஜபக்சவை பாராட்டியிருப்பார் என்றும் சந்திரசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.