மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த ஷிரின் சனூபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த ஷிரின் சனூபர்!


கிழக்கு மாகாணம் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் மஜீத் ஷிரின் சனூபர் (Abdul Majeed Zireen Zanoofar) அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று அந்நாட்டின் முதல் தர மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் (structural engineer) கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.


இவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A சித்திகளையும் க.பொ.த (உ/த) பரீட்சையில் 3A  சித்திகளையும் பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் (சிவில்) பிரிவில் முதலாம் தரத்தில் சித்தியடைந்தார். 


3A சித்தியுடன் பொறியியல் பீடத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் முஸ்லிம் மாணவியும் இவராவார்.


சாய்ந்தமருது G.M.M.S, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவியான இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் முஹம்மது பிராஸ் என்பவரின் மனைவியாவார்.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஓய்வு நிலை முகாமையாளர் அப்துல் மஜீத் - உம்மு சல்மா தம்பதியரின் ஏக புதல்வியும் கலாநிதி முஹம்மது ஸியாத் (பொறியாளர், அவுஸ்திரேலியா), ஷராபத் ஷிமர் (Rmit , Melbon) முஹம்மது ஸீராஸ் (பொறியியல் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர்களின் சகோதரியுமாவார்.


-A.L.Junaideen


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.