முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவருக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தை தியாகம் செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (09) முன்வந்துள்ளார்.
ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தான் பதவி விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அங்குனுகியோலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல தடவைகள் ஆட்சேபனைகளை முன்வைத்த போதிலும், ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக இரத்து செய்யப்பட்டது.
பின்னர் பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)