இந்தியா - மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச மருத்துவமனையில் ஏற்பட்ட தீப்பரவலில் 04 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துமனையின் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு (08) குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீப்பரவல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 04 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநிலத்தில் முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.