எமது கொள்கைக்கு இணங்காதவர்கள் வெளியேறலாம்! ஜனாதிபதி உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமது கொள்கைக்கு இணங்காதவர்கள் வெளியேறலாம்! ஜனாதிபதி உத்தரவு!


சேதனப்பசளைகள் பயன்படுத்துவதை மையமாகக் கொண்ட பசுமை விவசாயம் மட்டுமே நாட்டின் விவசாயக் கொள்கை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


இயற்கை பசனைகளை மட்டுமே அரசாங்கம் விநியோகிப்பதாகவும், இயற்கை விவசாயத்திற்கு மாத்திரமே மானியங்களை வழங்குவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதியின் ஊடகப்பிாிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் விவசாயிகள் முறையாக பயிற்றப்பட வேண்டும், இதை செயல்படுத்தும் போது இரசாயன பசளை மாஃபியாவை அடையாளம் காண வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


சரியான கொள்கையை வெற்றியடையச் செய்வதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என்று இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


பெரும்போகத்துக்கான பயிர்ச்செய்கை மற்றும் சேதனப்பசளைகளை வழங்குதல் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


தற்போது பெய்த கனமழையால் காய்கறி உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது.


மேலும், பசளை வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம், பெரும்போகத்தில் விளைச்சல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.


எவ்வாறாயினும், மாவட்ட அளவில், மொத்த விவசாய நிலங்களில் ஏறக்குறைய 70% நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது கூறியுள்ளனர்.


இந்தநிலையில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பயிர்ச்செய்கையை தாமதப்படுத்துவதற்கும் காரணம் அவர்கள் உாிய வகையில் தெளிவூட்டப்படாமையே என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


விவசாயிகளுக்கு துல்லியமாக பயிற்றுவிக்காத அதிகாரிகளிடம் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


பசுமை விவசாயக் கொள்கைக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பதில் வழங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அரசாங்கக் கொள்கைக்கு உடன்படாத அதிகாரிகள் அதில் இருந்து வெளியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.  


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.