2021 டி20 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலியா!

2021 டி20 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலியா!


2021 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


இந்நிலையில், 173 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


அணிசார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் 77 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் 18 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.