எட்டு பெண்கள் உள்ளிட்ட 10 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

எட்டு பெண்கள் உள்ளிட்ட 10 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!


பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் எட்டு பெண்கள் உட்பட 10 இலங்கையர்களை இந்திய சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.


இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-171 இல் 140 பயணிகளுடன் பயணித்துள்ளனர். தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதிகாரிகள் தீவிர ஆய்வுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.