நாட்டில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பெச்சரிக்கை!
advertise here on top
advertise here on top
happy kids fun world

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பெச்சரிக்கை!


இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) அறிவித்துள்ளது.


மேற்குறிப்பிட்ட குழப்பம், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.