கிண்ணியா இழுவை படகு கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தோர் விபரம் வெளியானது!
advertise here on top
advertise here on top
happy kids fun world

கிண்ணியா இழுவை படகு கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தோர் விபரம் வெளியானது!


கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 06 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த பலர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவத்தில், சப்ரியா (30 வயது) என்ற முன்பள்ளி ஆசிரியரும் அவரது முன்பள்ளியில் கல்விபயிலும் மகளான பாத்திமா சகிலா (மூன்றரை வயது) மற்றும் அவரது மகனான சேகுசகி (06 வயது) அடங்குகின்றனர்.


பாத்திமா சிரின் (08 வயது) மற்றும் அவரது இளைய சகோதரி (06 வயது) ஒருவர் உட்பட சேகு அப்துல் காதர் (70 வயது) என்ற வயோதிபரும் உயிரிழந்துள்ளார்.


ஆபத்தான நிலையில் இருந்த 06 வயது சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலும் காயமடைந்தவர்களில் 05 பெண் குழந்தைகளும், 06 ஆண் குழந்தைகளும், 04 பெண்கள் மற்றும் 04 ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.