முதலில் பேட்டிங் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பப்புவா நியூ கினியாவினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
வனிடு ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் தசுன் ஷானக லஹிரு குமார மற்றும் மகேஷ் தீக்ஷன தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்படி, இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)