நாட்டில் தினசரி இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று (25) நள்ளிரவு முதல் முழுமையாக நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம், உட்புற திருமண நிகழ்வுகளுக்கு 100 பேருக்கும், வெளிப்புற நிகழ்வுகளுக்கு 150 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்களில் 75 பேர் வரையிலும், வெளிப்புறமெனில் 100 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)