நாட்டில் புதிய பிரச்சினையாக அதிகரித்துவரும் பிச்சைக்காரர்கள்!

நாட்டில் புதிய பிரச்சினையாக அதிகரித்துவரும் பிச்சைக்காரர்கள்!


நாட்டில் யாசகர்களின் அதிகரிப்பு ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற பொது கணக்குகள் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பிரச்சினையை தீர்க்க சரியான திட்டம் இருக்க வேண்டும் எனவும் பொது கணக்குகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.


இது குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சிகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.


அத்துடன், பல்கலைக்கழக மட்டத்தில் யாசகர்கள் குறித்து அதிகளவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களம் பெறுவது முக்கியமானதாக இருக்கும் என்றும் அக்குழு கருதுகிறது.


நாட்டில் அதிகரிக்கும் யாசகர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரு கூட்டுத்திட்டம் தேவை என்றும் ஆலோசிக்கப்பட்டது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.