ஒக்டோபர் 21 ஆம் திகரிக்குள் மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் நீக்கப்படுமாயின், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேருந்து ஊழியர்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)