குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 31 வயதான ஸ்டீவன் ராஜ் எனபவரே உயிரிழந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சகோதரன் மாத்தளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த சகோதரனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.