சிங்கப்பூரில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

சிங்கப்பூரில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

சிங்கப்பூரில் இருந்து எட்டு மாத காலத்திற்கு டீசல் மற்றும் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.

குறித்த காலப்பகுதியானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியாக இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தர கொள்முதல் குழுவின் பரிந்துரைத்தலுக்கு ஏற்ப டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கான தனித் திட்டங்கள் M/s Vitol Asia (Singapore) Pte ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை 1,137,500 +10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) மற்றும் 262,500+ 10/-5% பீப்பாய்கள் டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.001) இறக்குமதி செய்யவுள்ளது.

மேலும், இலங்கை 1,341,000 +10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (92 Unl) மற்றும் 459,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்யவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.