வெளிப்பிரதேசங்களிலிருந்து நுவரேலியா வருவோர்கள் திருப்பி அனுப்படுவர்?

வெளிப்பிரதேசங்களிலிருந்து நுவரேலியா வருவோர்கள் திருப்பி அனுப்படுவர்?


வெளிப் பிரதேசங்களிலிருந்து நுவரேலியா மாவட்டத்திற்கு வருகை தருவோரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நுவரேலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு வீதம் என்பன தற்போது குறைவடைந்து வருகின்றன.


இந்நிலையில், பிற மாகாணங்களிலிருந்து நுவரேலியாவிற்கு வருபவர்கள் ஊடாக மீண்டும் கொவிட் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.


இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுவரேலியா மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.