குஷிநகர் விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானமாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!

குஷிநகர் விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானமாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாய் இந்தியமதிப்பில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர், குஷிநகர் விமான தளத்தில் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் 100 பெளத்த பிக்குகளும் சென்றுள்ளனர். கெளத்தம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததாக கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க புனித நகராக குஷிநகர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

புத்தர் மகாபரி நிர்வாணம் அடைந்த இடம் மற்றும் புத்தரின் யாத்திரை தலங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குஷிநகர் விமான நிலையம் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.