கடவுசீட்டு பெறுவோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

கடவுசீட்டு பெறுவோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!


நாட்டில் நாளாந்தம் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.


ஒரு நாள் சேவையின் கீழ் சேவைகளைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆல் அதிகரித்துள்ள அதேவேளை ஒருநாள் சேவைகளைப் பெறுவோரின் விண்ணப்பங்களின் சராசரி எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளது.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் பின் ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் 12,158 பேர் கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளனர்.


இதே காலப்பகுதியில் 11,242 பேர் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.


மேலும் கடந்த 10 நாட்களில் மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களிலிருந்து 10,145 பேர் சேவைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.