“டாட்டா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது”!

“டாட்டா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது”!

ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு (இந்திய ரூபா) வாங்கியதாக டாட்டா குழுமம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வந்தது, எனினும் சில கடன் பிரச்சினையால் யாரும் அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. மேலும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொது முடக்கம் விமான சேவையை மேலும் சிக்கலில் தள்ளியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஏல டெண்டர்கள் விடப்பட்டன. இதற்கு செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாட்டா குழுமம் விருப்பம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து ஏல விபரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பின்னர் இது குறித்த விபரங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக தெரியவந்தது. தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு (இந்திய ரூபா) வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஏர் இந்தியா தனியார்மயமானதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.