அமரிக்கா செல்வதாயின் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இவை தான் - இலங்கையில் 05 இல் 04 இற்கு அனுமதி!

அமரிக்கா செல்வதாயின் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இவை தான் - இலங்கையில் 05 இல் 04 இற்கு அனுமதி!

அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சர்வதேச பயணிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

"எஃப்.டி.ஏ இனால் அங்கீகரிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்ட ஆறு தடுப்பூசிகள் அமெதிக்க பயணத்திற்காக அனுமதிக்கப்படும்” சிடிசி செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

அதன்படி தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் ஐந்தில் நான்கு தடுப்பூசிகள் அமெரிக்க பயணத்திற்கு தகுதியானவை ஆகும். 

AstraZeneca (அஸ்டிராஸெனிகா), Moderna (மொடர்னா) , Pfizer (ஃபைசர்) மற்றும் Sinophram (சைனஃபோர்ம்) ஆகியவை அமெரிக்காவிற்கு பயணிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இன்னும் WHO ஒப்புதல் பெறாததால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த தடுப்பூசி விரைவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறும் என்று ரஷ்ய அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இலங்கையில் கிட்டத்தட்ட 160,000 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.