மீண்டும் செயலிழந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

மீண்டும் செயலிழந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!


பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடுகள் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் சில பயனர்களுக்கு செயலிழந்துள்ளது.


உலகின் மிக அதிகமாகக் பார்வையிட்ட இணையதளங்களின் நிலையை கண்காணிக்கும் downdetector.com படி, இங்கிலாந்து நேரப்படி மாலை 7:30 மணியளவில் 36,000 பேர் இன்ஸ்டாகிராம் சரியாக வேலை செய்யவில்லை என புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.


அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (58 சதவிகிதம்) செயலியில் பிரச்சினை இருப்பதாகவும், 23 சதவிகிதம் பேர் சர்வர் இணைப்பு தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.


மேலும், பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் சில பயனர்களுக்கு செயலிழந்ததாகத் தெரிகிறது. ஃபேஸ்புக் தொடர்பான புகாரில் அறிக்கைகளில் 60 சதவிகிதம் வரை வலைத்தளத்தை அணுகுவதில் சிக்கல்கள் உள்ளதாவும், 24 சதவிகிதம் செயலியில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போல தற்போது பல வாட்ஸ்அப் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரியவில்லை, ஆனால் கடந்த மணி நேரத்தில் புகார் அறிக்கைகள் அதிகரிப்பதாக கூற்றப்படுகிறது.


இது குறித்து பேஸ்புக் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,


"எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் மற்றும் ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்." என்று பதிவிட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாகஇன்ஸ்டாகிராம் அதன் ட்விட்டர் பக்கத்தில், 


"உங்களில் சிலருக்கு இப்போது இன்ஸ்டாகிராமில் சில சிக்கல்கள் இருக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் மிகவும் வருந்துகிறோம், விரைவாக சரிசெய்ய முயற்சி செய்கிறோம்" என்று கூறியுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.