கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற நீங்கள் யார்? இது எனது கட்சி! நாடாளுமன்றில் டயானா ஆவேசம்!

கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற நீங்கள் யார்? இது எனது கட்சி! நாடாளுமன்றில் டயானா ஆவேசம்!


மழைக்கு ஒதுங்குவதற்காக வீட்டுக்குள் இடமளித்தால் என்னையே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர் என்று தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.


வீட்டின் உண்மையான உரித்தைக் கொண்டுள்ள உரிமையாளர் நான் என்பதால் என்னை ஐக்கிய மக்கள் சக்தி இருந்து யாராலும் வெளியேற்றிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து டயனா கமகே நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நேற்று (08) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே டயனா கமகே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,


இந்தக் கட்சி எனது கணவரின் கட்சியே; நானும், கணவரும் இந்தக் கட்சியை கொடுத்த காரணத்தினாலேயே எதிர்க்கட்சியில் பலர் இங்கே வந்துள்ளனர்.


மழைக்கு ஒதுங்க வீட்டில் இடம் கொடுத்தால் வீட்டின் திறப்பையே மற்றி, என்னையே வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறு என்னை வெளியேற்றி விட முடியாது.


எனது மனச்சாட்சிக்கு இணங்கவே அரசுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன். சஜித் போன்று நான் பொம்மையாக இருக்க மாட்டேன் என்றார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.