நாட்டில் இரு நாட்களுக்கு முழுமையான மின் தடை!

நாட்டில் இரு நாட்களுக்கு முழுமையான மின் தடை!

கெரவலப்பிட்டியில் அமைந்துள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான 40% பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருகின்றன.

இதன்படி, இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், இதனால் இரு நாட்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

11 அரசாங்கக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல பெற்றோலியம், மின்சாரம் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.