சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் கைது!


13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ். மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் (போட்டோ ஸ்டூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ். மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.