இத்தாலியில் தனது இரு குழந்தைகளையும் கொன்ற இலங்கை தாய்!

இத்தாலியில் தனது இரு குழந்தைகளையும் கொன்ற இலங்கை தாய்!

 
இத்தாலி, வெரோனா நகரில் 11 மற்றும் 3 வயதுடைய இரண்டு மகள்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை இத்தாலிய பொலிஸார் தேடி வருகின்றனர்.

போர்டோ சான் பன்க்ராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் வரவேற்பு இல்லத்தில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 33 வயதான பெண் காணாமல் போனதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு சிறுமிகளும் ஜனவரி முதல் இத்தாலிய நகரமான வெரோனாவில் தங்கள் தாயுடன் வசித்து வந்ததோடு, தங்கள் தந்தையிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க நீதிமன்றம் அனுமதித்த பின்னர் இருவரும் தாயுடன் வசித்து வந்தனர்.

இரண்டு குழந்தைகளும் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்ததை அதை வீட்டுக்கு வருகை தந்த கூட்டுறவு நடத்துனர் ஒருவர் கண்டுள்ளார்.

தாய் குழந்தைகளை மூச்சுத் திணற வைத்து கொன்றதாக தெரிவதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் இருவரும், படுக்கை பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.