விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நண்பன் படத்துக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலம் காயத்ரி ஷான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
-இந்திய ஊடகம்