60 சட்டங்களை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை! -நீதி அமைச்சர்

60 சட்டங்களை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை! -நீதி அமைச்சர்

சட்டத்தரணி அலி சப்ரி

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை திருத்தியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்


சிறைச்சாலைகள் சீர்திருத்த மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சின் அதிகாரிகளுடன் இராஜகிரியவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (13) கலந்துரையாடலிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.


நீதித்துறையில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.