இவர்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

இவர்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவிப்பு!


வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடு இடம்பெறும் டிசெம்பர் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எந்த அதிகாரப்பூர்வ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான (2022) அரசாங்க வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

அன்றிலிருந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.