சுற்றுலா செல்ல ஆயத்தமாகுவோர்க்கான மகிழ்ச்சி செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலா செல்ல ஆயத்தமாகுவோர்க்கான மகிழ்ச்சி செய்தி!


கொரோனா தொற்று காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீள் திறக்கவுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.


சுற்றுலா பயணிகளின் புகழ்பெற்ற புனித சுற்றுலாத்தலங்களான பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தினால் பராமரிக்கப்படுகின்றன நாட்டிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களையும் சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப திறக்கப்படும்.


அத்துடன், உலக மரபுரிமை வலயமான காலி கோட்டையில் அமைந்துள்ள இலங்கையின் ஒரேயொரு கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி இப்பன்கடுவ கல்லறை அருங்காட்சியகம், தம்புள்ளை புதைபடிவ பாதுகாப்பு மையம், அபயகிரிய சீகிரியா, கண்டி, பொலன்னறுவை, கதிர்காமம், யாப்பஹுவ, இரத்தினபுரி, மொனராகலை, நாமல் உயண, திருகோணமலை, தம்பதெனிய, ரிதீ விகாரை, யாழ்ப்பாணம், ரம்பா விகாரை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படும் என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.