புதிய அம்சத்துடன் புது அப்டேட் ஒன்றினை வெளியிட்ட வாட்ஸாப் மற்றும் அதனை செயற்படுத்தும் முறை!

புதிய அம்சத்துடன் புது அப்டேட் ஒன்றினை வெளியிட்ட வாட்ஸாப் மற்றும் அதனை செயற்படுத்தும் முறை!


வாட்ஸாப் நிறுவனம் தனது பயனர்களின் செய்திகளை மிகவும் பாதுகாப்பான அமைப்பாக மாற்றுவதற்கான புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 


அதனடிப்படையில், Chat Backup களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (End-to-End Encryption) அறிமுகப்படுத்தி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


இது தவிர இந்த புதிய அப்டேட்டானது வாட்ஸாப்பில் இருந்து பேக்கப்ஸ்களில் ஸ்டார் செய்யபட்ட, சேட் ஹிஸ்ட்ரியை (Chat History) பாதுகாக்கவும் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.


ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் App ஆன வாட்ஸாப் கூகுள் டிரைவ் மற்றும் ஐக்ளவுட் உள்ளிட்டவற்றில் ஸ்டோர் செய்யப்படும் சேட் பேக்கப்களுக்கு (chat backups), எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வெளியிட்டு இருக்கிறது. 


இந்த புதிய அப்டேட்டை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த சில நாட்களுக்கு பிறகு தற்போது வெளியிட துவங்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூஸர்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப்ஸ்களை உருவாக்கத் தொடங்குவதாக வாட்ஸாப் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இணை பெறாதவர்கள் காத்திருக்கவும், விரைவில் கிடைக்கும்.


இந்த புதிய அம்சத்தை செயல்படுத்தும் முறை:


  1. உங்கள் வாட்ஸாப் செயலியில் உள்ளே சென்று, அங்கு இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். Settings இல் உள்ள Chats பகுதிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு கீழே இருக்கும், Chat Backups இற்கு சென்று End-to-End encrypted backups இற்கு செல்ல வேண்டும்.
  3. பின்னர் அங்கு அறிவுறுத்தப்படும் வழிமுறைகளை முறையாக செய்ய வேண்டும்.
  4. அனைத்து வழிமுறைகளும் முடிந்த பின்னர் Done என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. இப்பொழுது, உங்கள் எண்ட்-டு-எண்ட் பேக்கப்பை வாட்ஸாப் தயார் செய்வதை காணலாம்.


பாஸ்வேர்ட் அல்லது கீயை மறந்துவிட்டால் உங்களின் End-to-End encrypted backup இணை மீட்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.